Thursday, August 8, 2024

வசந்தத்தின் வாசல் வர

 செல்வம் பெற

எங்கும் சென்று சேர்


துயரறுக்கும் ஞானம்

 பெற இங்கு வா🌿


அறியாமை மேகத்தை 

அமர வைத்து கலைக்கின்ற தலம் 


அனுபவத்தின் பின்னே

அனைத்தும் உணர்த்தும் நிலம்🌿



ஊர்க் குருவி உயரப் பருந்தின்‌ 

பார்வை அறியாது


வளராத அறிவின் பிழையும் 

வாழ்க்கைப் பிழையோ


பிழையென்ற பிறவியின்

வேரறுக்கும் வித்தக சத்குரு


விஸ்வநாதரை கண்டு மகிழ

மாமதுரை காணாத தவம்


அக்கினி சுட்டெரிக்கும்

ஆயினும் சுத்தமாக்கி சுகம் சேர்க்கும்


களங்கங்களை உடைத்து 

கதவை திறக்கின்ற களம் 


அவையில் அமர வைத்து 

அன்போடு அருளுரைத்து


அகமதில் நாளும் தெளிவாய்

மேன்மை ஞானம் பெற உயர்வாய்


கருணைப் பதஞ்சலியின் வடிவாகிய

 காசி விஸ்வநாதர்


துணையிருப்பார் என்றும்


#மாதங்கியின்_மைந்தன்

வீடு அறி விடை அறி

 வீடென்பதை அறி 


விடையென்பதை அறி


விடையேறியவன் மேலேறி 

நிற்கும் காலென்பதை அறி 🙏🏽





காலதை அறியாமல் 

காடேறுகின்ற நிலை அறி 🙏🏽


கவன ஒருமையில் உட்புகுந்து 

காற்றில்லா நிலை அறி 🙏🏽


தன் நில மாண்பு அறியாமல் 

அடி மனை அறிவை தந்திடுமா 🙏🏽


மான் மனதை மருளச் செய்திடுமா 🙏🏽


அறிவை இரண்டான அன்னவனே


தன்னிலை உணர்ந்து 

பிறர் நிலையும் அறி


பிறர் நிலை உணர்ந்த பின்னரே 

ஏகடியம் மறுக்க அறி


அறிந்தவை அறிந்து 

பின் பின்னரே 


தெரிந்தறிவாய் 

பின் தெளிவாய் 

உள்ளறி என்பதே


உயர்வான அறிதல் என

பின்நின்று பேதமை அறியும்

 புத்தி அறிவாய் 🌿


ஆயிரம் கலையில் ஒன்றை அறிவாய் 

பின் அதன் வழி தெளிவாய் 


என்று உரைத்த ஆதிசேடன் தடமறி

பின் தன்னை அறிய ...


அறிந்தவர்களை அறிந்து

 சொல்லும் தெய்வம் 


அறிவின் வடிவான அன்பு ரூபம் 


ஆதிசேஷ பதஞ்சலியார் 

அறிந்து தந்திடுவார் தெளிவை🌿🌿🌿


#மாதங்கியின்_மைந்தன்

Wednesday, July 31, 2024

ஆடி ரேவதி நட்சத்திர குருபூஜை தரிசனம் ( கவிதை நடையில் ) - 2024

 முல்லை மொட்டவிழ்ந்து

முன்மனம் அறிந்த

 உள்மனத்தலைவனின்

சிரமதில் தவிழ்ந்து

 

வான் கொள்ளா மழை

என்றே வாழ்த்திடவே

பொழிந்ததே மாரியென

மலர்க் குவியல்

 

கவியாய் மாறிய 

கடக வெள்ளியும் 

கயல்விழி விசாலாட்சியை

கண்குளிர காணத் தவம்

 


செய்திட்ட அடியவர் உரைத்த

 ஆயிரம் நாமமும் 

ஆயிரமாயிரம் தீப விழியாளுடன்

 

அந்தாதி எழுந்ததே

 அழகிய தியானமதின்

பொருள் பின் தொடர

தெவிட்டாத உன் முகம்

 

நாளும் புதியதாய் 

நமக்கென்றும் இனிமையாய்

நித்திய தலைமையும் 

 

நிரந்தர தெய்வமாய்

ஆதிசேஷ பதஞ்ஜலியை

அன்புக் குருவின் 

நினைவோடு 

 

வாழ்வே உனக்காக 

வாசியும் என்றும் நீயாக 

வாழை போல் உடன் வாழ்பவர் உயர

 

வல்லமைக் குருவின் பின்பலத்தோடு 

முன்சென்று களம் சேர்ப்போம்

களைப்பற்ற பணிசெய்ய 

 

காசி நாதனாய் 

உமைக் கொண்டாடும் 

ஆதிசேஷ பதஞ்ஜலியாரே 

என்றும் நமக்குத் துணை

 

பணிவுடன்

மாதங்கியின் மைந்தன்