நான் கேதுவின் ராஜாளி
முட்களை சுமந்து கொண்டு இருக்கின்றாய்...
முளைத்து விட்ட மலர் வனத்தின்
வாசம் எட்டவில்லை உனக்கு...
பேரின்ப கதவுகள் திறக்கும்
வித்தை அறியமாட்டாய்...
விழிகள் இல்லா மனதிலே
வைரத்தின் மதிப்பு தான் என்ன....
கவலையெனும் வெள்ளத்திலே
காலம் முழுவதும் வீழ்வது உந்தன்
விதி என்றாகிப் போனால் ...
பூக்கள் சொல்லும் கவிதையும் புலனுக்கு அகப்படாமல் போகும்....
அவன் என்னும் வானத்திலே ..
அன்பெனும் சிறகு விரித்து பறக்கும்
நான் கேதுவின் ராஜாளி...
கண்ணுக்குப் புலப்படாத
கர்மவினை யோடு போரிடும் நீ...
ஒரு வெற்றுப் போராளி...
இறுதியை முத்தமிட என்றோ
என் வாள் யுத்த களம் கண்டு விட்டதே...
இடையர் தலைவன் இதயம்
சீர்மிகு தேசத்திலே என்னை மீட்டெடுக்கும்....
#மாதங்கியின்_மைந்தன்
No comments:
Post a Comment