Showing posts with label மாதங்கி. Show all posts
Showing posts with label மாதங்கி. Show all posts
Thursday, March 5, 2026
ஏகமே அத்விதீயம்
தானும் நீயும்
வேறெனப் புலப்படா
சிந்தை தனதென்பதால்
பிரித்தறிந்து பேதம்
சொல்லிட உனக்கென்ற
அக்கறை எனதில்லை......
அக்கரையில் நாமில்லை
இக்கரை நாளும்
நமதானதால் அக்கறையும்
அன்பும் காட்டிடும்
அவசியங்கள் எல்லாம்
உலகிற்கோர் வேஷம்.....
எனதென்ற இயல்பை
கடந்தே பின்னே நீ என
பேதம் கடந்து நான்
நாமாகும் யோகம்
நாளெல்லாம்
நமக்குச் சொந்தம்.....
பேதம் உருவாக்கும்
படைப்பில் ஒன்று நானாக
வாசியும் நீ தான்
வாழ்வும் நீ தான்
ஒளியற்ற இருளில்
ஒடுங்கிடும் உயிரின்
தன்மை எல்லாம்...
இரண்டல்ல வேறல்ல
ஒன்றேயான பிரம்மமே
(ஏகமே வாத்விதீயம்” )
தன்னை தனக்குள்
ஒன்றி ஒன்றாய்க்
கலந்த உயிர்க் காதலின்
ஒருமித்த உன்னதம்....
#மாதங்கியின்_மைந்தன் #மாதங்கியான்
Saturday, February 28, 2026
உள் தமிழின் உயிர்ப்பு
ஆயிராமாயிரம் கணங்கள்
நேருக்கு நேர் என்றாகினும்
வரு மேகங்கள் என உந்தன்
இடைவிடாத பொய்க் கோபங்கள்....
பொய்களை மாய்க்கப் பிறக்கும்
உன் அருகிருப்போ புதுக்கவியென
இன் தமிழென வெளிவரும்
நேசத்தின் விதைகளே!!!..
வாக்கியங்கள் பல மாற்றி
பின்னே அதன் வரிசையும் மாற்றி
சற்றேனும் தளர்வுகள் என
தடம் மாற்றும் நிகழ் கால பந்தங்கள்...
விநயம் விகல்பம் என்றே வினோத
விகாரங்கள் என இருவரின் இடையே
வரும் மாயங்கள் தவிர்க்கச் செய்தாய்
உள் தமிழ் உன்னால் மெல்ல எழும்...
காலம் கணிதனாய் சொல்லும்
புதிய விடையெல்லாம் புதுமையென
நாளும் வியக்கிறேன் இதனின்
பழமை மறந்த நிலையாய்☺️
எனக்குள்ளே நான்.....
#மாதங்கியின்_மைந்தன் #மாதங்கியான்
Thursday, February 19, 2026
மீண்டும் ஒரு மேக தூதம்
மீண்டும் ஒரு மேகதூதம்
உனக்காக நான் பாட வேண்டும்...
மேகங்களை அனுப்பி தூது சொல்லும் சாத்தியம் மீண்டும் கை கூட வேண்டும்
இடையில் தடைகள் இல்லாமல்
மன அஞ்சல் உன்னிடம் சேர வேண்டும்
காலம் கருணை கொண்டதால்
கவிதை உன் முகவரி அறிந்தேன் 🙏
அத்திங்களில் பிழையின்றி
என்னை உன்னிடம் அறிவித்தேன் 🌿🌿
தசம் இரண்டு ஆண்டுகள் தாண்டி
தடாதகை உணர்த்திய அதிசயம்
விதி வழியே இயல்பாய் செல்ல
என்னை இன்னும் பணிக்குமோ 🪷🪷🪷
துயர் துடைக்க உடன் நின்று உதவிடும்
தோழமையாய் இருக்க வரம் கேட்டேன்
திருவருளால் காட்டியவள் யாரோ
உன் புரிதலுக்கு பெரிதும் உவப்பாள்
காத்திருக்கிறேன் அதிசயங்களை காண
#kavithaitamil #kavithai #tamilkavithai #மாதங்கியின்_மைந்தன் #மாதங்கியான்
Wednesday, February 18, 2026
அன்பியலின் பெருந்துணை
சிறு துயரங்கள் ஆகிப்போன என் சுமையை சுமக்கும் உன் பணிதான் அன்பியலே எத்துணை பெரிது.....
மலர்ச்செடிகள் சூழ் வனத்தின் நடுவே
மகரந்த நறுமணம் போல
உன் மனம் நினைத்து நெகிழ்வேன்.....
வலியில்லாத வாழ்க்கை தரத்துணிந்த
என் சித்தம்.. சித்தமதின் எண்ணங்களை
பெருமிதமாய் முடித்திருக்க காலம் உதவட்டும்.....
பெரிதான பொருள் சேர்ப்பில்
வெறும் புகழில் மனமில்லை.
நிகழ்கால ஊறுகள் பல தன்மைக்கு வருங்காலத்தில் இடமில்லை......
இடையிடையே சிறு இடைவெளிகள் ஒன்றே உன்புகழ் தமை
எமக்கு உணர்த்தும். என்னுள்ளே
மெல்ல மெல்லத் தமிழ் மலர்த்தும்..
இனியொரு தருணத்திலும்
உன் இயல்பினை முத்தமிழாய் விளிப்பேன்..
முகுந்தன் கண்ட பெருந்துணை போல...
இல்லம் இனிக்க தன்னை பணிக்கும்
கனிவான உள்ளம் கொண்டவளே....
வாக்கில் கலைமகள் நின்றாடும்
கவி நிலவே...
வாழ்க நாளும் வளர்கவே....
#மாதங்கியான் #மாதங்கியின்_மைந்தன்
Tuesday, February 17, 2026
இதயத்தின் சாசனம்
உலகெங்கும் தேடி அலைந்தேன் பின்பு உன்னிடம் அது ஒளிந்துள்ளதை நான் உணர்ந்தேன்.
பார்வை குற்றம் என்று எண்ணாதே பாராத குற்றம் என்று கூட சொல் 🪷
உன் நெஞ்சகமே என் மஞ்சமான நிமிடங்கள்..
மௌனத்தின் பரிவர்த்தனைகள்
புன்னகை ததும்பும் பார்வைகள்....
பாவக சுபத்துவத்தை ஆயுளுக்கும் வளர்த்தெடுக்கும்
அவள் இயல்பு கவியின்
உவப்பாய்...
சந்தை இசைதனில் சிந்திக்க மறந்திட்ட
மேன்மை வித்தகம்
அட்ட கருமத்தை தொலைத்த அற்புதத்தை நிகழ்த்திடுமோ🪷
நித்திய காதலனாய் நிரந்தர விடை கொடுக்கும் ஒரு நாளில் உன் முன்னே நான் சென்று...
நீ இல்லா தனிமையை கொன்று தீர்ப்பேன்
எனதாயுள் என்ற மேன்மையை இணைத்தும் நீ எனக்குமாய் வாழ வேண்டும்...
என் இனிய காதலே
என் பின்னும் நீ வாழ்க பல்லாண்டு
🪷🪷🙏🙏
#மாதங்கியான்
Monday, February 9, 2026
அவள் பெயர் மாதங்கி
என்னிடம் என்றோ
விலகி வெகுதூர இருப்பில்
உன் நினைவுப் பயணங்கள்............
முகில்கள் அசைந்து
வருடும் காற்றைப் போல
இனிமை அது உன் காதல் ...............
நீள் துயில் கொண்ட
என் இதயம் உன் நினைவில்
நீங்காத தன்மை ஓர் நிம்மதி................
கடமையதில் தொலைந்து
போனதோ எந்தன் மீதான் உன்
மையல் அது வெகுவாய்............................
இன்னிசையும் முத்தமிழும்
என்னுயிராய் எக்காலம் தொட்டு
முக்காலமும் ஆனவள்
அவள் பெயர் #மாதங்கி.
சரண் பழகிய நெஞ்சத்தின்
விகல்பங்கள் துடைத்தெறிந்து
தன்னுள் என்னை தொலைத்திட
அருள் புரிவாளோ அந்த அன்னை......
#மாதங்கியான்
Friday, October 6, 2023
உன் காதல் ஒரு வெகுமதி
இருப்பினில் மையம் கொள்ள
இயல்பாய் அன்பு செய்யும்
என்னை ஆட்கொள்ளும்
உன் காதல் ஒரு வெகுமதி...
இருத்தலில் கடினம் பல
சகித்துச் செல்லும் பண்பில்
என் சகியே உன் மனம்
எந்நாளும் ஓர் நிறைமதி...
அவனிடம் கேட்டு வைத்தேன்
அன்பே! உனை என் வரமாக
தந்தும் அரவணைத்த பூரணை
மதியாள் மாதங்கி தயவால் 🌿
காவியம் என காதல் பணி செய்து
ஆவியை ஒன்றாக்கி உணர்த்திடும்
அற்புத யோகத்தின் வழியே நீயென
நானென்ற பேதம் விலக்கிடுவோம்...
வினய மானுடத்தின் வீம்புகளை
நாம் துறக்கின்ற வழியில் அன்பே
வேதனை வெந்துயர் என்பதெல்லாம்
ஈசனின் வழியில் இல்லையடி...
களைப்பற்ற மனம் தந்து உத்திர
வழியில் உயர்வான காட்சியெல்லாம்
காட்டிடும் தாயெனும் தலைமை
இனியும் நமக்கு தயவு செய்யும்....
கவிதை எழுதிட பணித்திட்ட காலை
என்னை கடிதமாய் மாற்றி வைக்கும்
உதயனின் இதயம் இன் தமிழால்
உனை இனிதென நாளும் பற்றும்...
#மாதங்கியான்
Monday, October 2, 2023
Subscribe to:
Posts (Atom)
-
நீண்ட நாட்களாக ஒரு ப்ளாக் ஆரம்பிக்க வேண்டும். நாமும் ஏதாவது எழுதி தள்ள வேண்டும் என்று ஒரு ஆசை. எதை பற்றி எழுத என்று யோசித்தால் அடிப்படையில்...
-
ஆயிராமாயிரம் கணங்கள் நேருக்கு நேர் என்றாகினும் வரு மேகங்கள் என உந்தன் இடைவிடாத பொய்க் கோபங்கள்.... பொய்களை மாய்க்கப் பிறக்கும் உ...
-
தானும் நீயும் வேறெனப் புலப்படா சிந்தை தனதென்பதால் பிரித்தறிந்து பேதம் சொல்லிட உனக்கென்ற அக்கறை எனதில்லை...... அக்கரையில் நாமில்...




