Showing posts with label பதஞ்ஜலி. Show all posts
Showing posts with label பதஞ்ஜலி. Show all posts

Thursday, August 8, 2024

வீடு அறி விடை அறி

 வீடென்பதை அறி 


விடையென்பதை அறி


விடையேறியவன் மேலேறி 

நிற்கும் காலென்பதை அறி 🙏🏽





காலதை அறியாமல் 

காடேறுகின்ற நிலை அறி 🙏🏽


கவன ஒருமையில் உட்புகுந்து 

காற்றில்லா நிலை அறி 🙏🏽


தன் நில மாண்பு அறியாமல் 

அடி மனை அறிவை தந்திடுமா 🙏🏽


மான் மனதை மருளச் செய்திடுமா 🙏🏽


அறிவை இரண்டான அன்னவனே


தன்னிலை உணர்ந்து 

பிறர் நிலையும் அறி


பிறர் நிலை உணர்ந்த பின்னரே 

ஏகடியம் மறுக்க அறி


அறிந்தவை அறிந்து 

பின் பின்னரே 


தெரிந்தறிவாய் 

பின் தெளிவாய் 

உள்ளறி என்பதே


உயர்வான அறிதல் என

பின்நின்று பேதமை அறியும்

 புத்தி அறிவாய் 🌿


ஆயிரம் கலையில் ஒன்றை அறிவாய் 

பின் அதன் வழி தெளிவாய் 


என்று உரைத்த ஆதிசேடன் தடமறி

பின் தன்னை அறிய ...


அறிந்தவர்களை அறிந்து

 சொல்லும் தெய்வம் 


அறிவின் வடிவான அன்பு ரூபம் 


ஆதிசேஷ பதஞ்சலியார் 

அறிந்து தந்திடுவார் தெளிவை🌿🌿🌿


#மாதங்கியான்

Wednesday, July 31, 2024

ஆடி ரேவதி நட்சத்திர குருபூஜை தரிசனம் ( கவிதை நடையில் ) - 2024

 முல்லை மொட்டவிழ்ந்து

முன்மனம் அறிந்த

 உள்மனத்தலைவனின்

சிரமதில் தவிழ்ந்து

 

வான் கொள்ளா மழை

என்றே வாழ்த்திடவே

பொழிந்ததே மாரியென

மலர்க் குவியல்

 

கவியாய் மாறிய 

கடக வெள்ளியும் 

கயல்விழி விசாலாட்சியை

கண்குளிர காணத் தவம்

 


செய்திட்ட அடியவர் உரைத்த

 ஆயிரம் நாமமும் 

ஆயிரமாயிரம் தீப விழியாளுடன்

 

அந்தாதி எழுந்ததே

 அழகிய தியானமதின்

பொருள் பின் தொடர

தெவிட்டாத உன் முகம்

 

நாளும் புதியதாய் 

நமக்கென்றும் இனிமையாய்

நித்திய தலைமையும் 

 

நிரந்தர தெய்வமாய்

ஆதிசேஷ பதஞ்ஜலியை

அன்புக் குருவின் 

நினைவோடு 

 

வாழ்வே உனக்காக 

வாசியும் என்றும் நீயாக 

வாழை போல் உடன் வாழ்பவர் உயர

 

வல்லமைக் குருவின் பின்பலத்தோடு 

முன்சென்று களம் சேர்ப்போம்

களைப்பற்ற பணிசெய்ய 

 

காசி நாதனாய் 

உமைக் கொண்டாடும் 

ஆதிசேஷ பதஞ்ஜலியாரே 

என்றும் நமக்குத் துணை

 

பணிவுடன்

                                                                                                                                       #மாதங்கியான்