முல்லை மொட்டவிழ்ந்து
முன்மனம் அறிந்த
உள்மனத்தலைவனின்
சிரமதில் தவிழ்ந்து
வான் கொள்ளா மழை
என்றே வாழ்த்திடவே
பொழிந்ததே மாரியென
மலர்க் குவியல்
கவியாய் மாறிய
கடக வெள்ளியும்
கயல்விழி விசாலாட்சியை
கண்குளிர
காணத் தவம்
செய்திட்ட அடியவர் உரைத்த
ஆயிரம் நாமமும்
ஆயிரமாயிரம் தீப விழியாளுடன்
அந்தாதி எழுந்ததே
அழகிய தியானமதின்
பொருள் பின் தொடர
தெவிட்டாத உன் முகம்
நாளும் புதியதாய்
நமக்கென்றும் இனிமையாய்
நித்திய தலைமையும்
நிரந்தர தெய்வமாய்
ஆதிசேஷ பதஞ்ஜலியை
அன்புக் குருவின்
நினைவோடு
வாழ்வே உனக்காக
வாசியும் என்றும் நீயாக
வாழை போல் உடன் வாழ்பவர் உயர
வல்லமைக் குருவின் பின்பலத்தோடு
முன்சென்று களம் சேர்ப்போம்
களைப்பற்ற பணிசெய்ய
காசி நாதனாய்
உமைக் கொண்டாடும்
ஆதிசேஷ பதஞ்ஜலியாரே
என்றும் நமக்குத் துணை
பணிவுடன்
மாதங்கியின் மைந்தன்