பேரன்பே!💞🌿🌿🌿
ஒருமை எனும் ஆகாயம்
என்றும் உனக்காக காத்திருக்கும்....
உள்முகத் துணிவும் உந்தன்
பணியென தொடர்ந்து விட்டால்
ஆச்சர்யங்கள் கூட்டி வைக்கும்...
எழுகின்ற விருத்தங்களை
இயல்பாய் விரட்டி விட
வருகின்ற வெற்றிடம் தான்....
வெற்றித் தலைமை தன் சித்தமென
நாம் அதுவாகிட ஒன்றாகிட
அற்புத மனமாகிய ஆசனம் 👍
திருமலை சுமப்பவன் நம்மவர்
அன்பிலே அதற்காய் அழைப்பும்
அழகாய் வந்ததே...
விண் அளிக்கும் பரவசங்கள்
எல்லாம் அந்நாள் தொட்டு
அவனருளால் துலங்கியதே ⚕️
மாய மனம் வரித்த கால
வலையினுள்ளே மாயையால்
வீழ்ந்திடாது நீயும்....🔥
நித்தியத் திங்கள் போல
நினைவினில் பூரணைப் பொலிவுடன்
நிலைத்திட எத்தனிப்பாய்...🏹
துயர் எனும் மேகம் விலகிட
பேசா மந்திரத்தின் துணை தேட
உதவியென உதயனின் செயல்.....💝
வரவினில் மகிழ்ந்திடாது
இருளினில் உயிர்களின் மனம்
அறிவாய் அன்பே!!✍️
வற்றிய ஓடையின் சேற்றில்
சிக்கிய கயல் போல வாழ்வின்
மாயையால் அவர் நிலை!!🙆
பொய் தேகம் காணும் மாற்றங்கள்
மாய மனதின் குற்றங்கள்
எல்லாம் ஊழின் உருட்டாய்.....⛷️
பரியின் பயணம் ஆகிய வாழ்வில்
சிந்தனை யாவுமே சிவமானால்
தித்திக்கும் தேனென வாழ்வும்...
இயல்பாய் ஆனந்தம் கூடிட
எண்ணிடக் காலங்கள் எல்லாம்
அதீதமில்லை அன்பே⚕️
அகமதை மறைத்திருக்கும்
மோக மேகமதை யோகம் கொண்டு
விலக்கி விட எத்தனிப்பாய்...
முனைப்பின் முடிவாய் அன்பே!
பேரொளி முன்னே தோன்றி
நாம் காணா பெருமிதம் தந்து...
ஒன்றாதல் ஒருங்கிணதல் என்ற
உயிர்க்காதலின் உன்னதம்
காண்போம் அந்நாள்🌿 அவனால் ❤️
ஆகட்டுமே அதுவும் 🌿🌿
#மாதங்கியின்_மைந்தன்