Friday, October 20, 2023

இதயம் கோர்த்திட்ட இனிய நிலவே👩‍❤️‍👨

 


நானே நாளும் தள்ளி நின்று 

வியந்து பார்க்கின்ற 

உன்  உயர்வும்  ஓர்‌ ஆச்சர்யம் ❤️

அங்கே அங்கே உன் உருவம் 

மறைந்து வியப்பாய் 

நிலைக்கின்ற தெய்வீகம்💞


நம் குரு  சொன்ன வழியில் 

நல்லோர் உள்ளமெல்லாம் 

நாம் வணங்கும் புனித தலம் 💙

உனைப்போல் அவர் தம் உறவும்

 நாளெல்லாம் என்னை 

பெரும் மகிழ்வில் ஆழ்த்திடும்😊


அகந்தையும் ஆணவமும்

நீக்கி விந்தையாய் உலவும்

 நீ மாதர் இனப் புதினம் ❤️🤔

அன்பு நிலவே🙏🏽

ஒரு நூற்று தமிழுக்கு என்றும் 

எனக்குள் விதையாய் நீ🪷✍️


பாதகம் செய்யும் 

ஆதவன் திசையில் திசையில்

 கோள்களின் நகர்வும் உனக்காய் 🔥


 மாண்பானவளே 🤘

திங்கள் வரவின் பின்னே

 தீ கூட உனக்குத் தென்றலாய் 🦚🦚

மாறிடும் விந்தை நிகழும் 🟡🟡


பொன் நகையும் புகழும்

 உனைச் சேரும் காலம் வரும் 

அன்பே 💙💙அதுவரைஇயல்பான

உன் புன்னகை மலர்ந்திருக்கும் ✍️


செயற்கை  ஆர்வங்கள் துறந்த 

இயற்கை தந்த அழகியல்

 கவிதை நீ🌿


எண்ணங்களைத் துறந்து 

மௌனத்தை இன்பமாக

நான் எண்ணுகின்ற நேரம்


என் பணியும் நீயே

எனக்காய் சேர்த்து

ஆற்றுகின்ற நீ என் வித்தகம்


கயல் விழியாளின் கருணையில்

காலத்தில் நாம்பெற்றெடுத்த

 கவி மலர்கள் இரண்டும்🌿

என்னோடு உன்னை காத்து

 பிறவிப் பெருங்கடல் கடந்திட

நன்றாய் துணை செய்யும் 🙏🏽


ஒருமையின் உறுதி என்று ஏற்றிட்ட

 அந்நாளில் தொட்டு

தடம் மாறா தடுமாறா உன் பண்பும் 

நம் அருமைத் தலைவன் 

அன்னை மனத்தவன் 

ஆதிசேஷ பதஞ்சலியின் ஆசியோடு 


 பேரன்பினாள் மாதங்கியின் தயவால் 

ஆச்சர்யங்கள் எல்லாம் 

அணிவகுக்கும் அன்பே🙏🏽


மூலத்திலே தன்னை கரைத்திடும்

 முனைப்பான செயலும் 

நிகழ்ந்திட்ட பின்னரும்

ஆயுளும் அகவையும் 

நீண்ட சுகமே சூழ்ந்திட்டு

நிலத்தில் குறையாத புகழோடு 

நீ நெடிதும் வாழ்ந்திருக்க


அகம் திறந்தே உரைப்பேன்

 எனது இனிய திருமண நாள்

 நல் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽






        காதலுடன்

மாதங்கியின் மைந்தன்

சிவ. உதயகுமார் 







No comments:

Post a Comment