பேரன்பின் புரிதலாய்
பல்லாண்டு காலம்
நாம் கண்ட பின்னும்
சற்றேனும் அயர்வின்றி.....
இணைவில் நாளும்
புதுமை காணும் இணையர்
என்று இகமும் இதமாய்
மெல்லப் புரிதல் கொள்ளும்....
எதிர்கொண்ட சிறு இடர்களும்
நிகழ்கால இருத்தலின்
அவசியத்தை அதிசியமாய்
பின்தொடரச் செய்யும்.....
பல நூற்றாண்டுப் பழமையாம்
அந்த ஈர்பாதி ஈந்த ஈசனைப்
போல இனியவளே இனிமையை ❤️
இணைவிலே தொடர்வோம் ....
பெருந்தலைவர் பதஞ்ஜலியும்
பேரன்பினாள் மாதங்கியும்
தந்து விட்ட புரிதலை
காதலாய் மாற்றிக் கனிவோடு....
உனக்களிக்க ! என் உமையவளே
ஆயுள் முழுக்க பணிசெய்வேன்....
இனிய திருமண நாள்
நல் வாழ்த்துக்கள்
அன்புடன்
சிவ உதயகுமார்
No comments:
Post a Comment