இருள் கண்டவுடன் விலகாது
என் கரத்தை தான் கோர்த்து நடக்கிறாய்
கவ்விய இருள் ஏற்படுத்தியதோ
உன் நெஞ்சில் கலக்கம்...
நடை பாதைகள் எங்கும் இருளாக
இருக்கக் கூடாதா என்ற எண்ணம்...
கோர்த்த கரங்கள் விலகாது
தொடருமோ வாழ்க்கை
வழிப்பயணம் 🙏🏽
இருவிரல் தழுவி ஒருவரென
நெருப்பினை வலம் வந்த
அந்நாள் மணக்கோலம்
கடமையில்
தன்னை தொலைத்திட்ட
காலத்தின் நடுவே கண்முன்னே
சதிராடும்🌿
அமைதியில் நிலைக்கின்ற ஞானம்
அழகாய் பிறக்கும் முன்பே
அன்பே 🪷🪷
ஒரு நூற்றுக்கவிதைக்கு
வித்திடும் உன்னோடு
என் வழிப் பயணம் 🙏🏽
அழகாய் உன்
நினைவுகளை சுகமாய் சுமந்திட
உரமாய் மெருகூட்டும் 🪷
எனக்குள் உன்னை கரைத்திட்டு
தன்னையும் நான் கரைத்திட
காலத்தில்
தனி வழியாய் தலைமையும்
தந்திட்ட தியானம்
உணர்வில் அது அமுதம்
பேரன்பே. ❤️
அந்த ஆனந்த மெளனம்
வாழ்க்கைக்கு ஒளியாகும்
அன்புடன்
மாதங்கியின் மைந்தன்
சிவ.உதயகுமார்
No comments:
Post a Comment