Friday, October 6, 2023

உன் காதல் ஒரு வெகுமதி



இருப்பினில் மையம் கொள்ள

இயல்பாய் அன்பு செய்யும்

என்னை ஆட்கொள்ளும் 

உன் காதல் ஒரு வெகுமதி...

உன் காதல் ஒரு வெகுமதி

இருத்தலில் கடினம் பல 

சகித்துச் செல்லும் பண்பில்

என் சகியே உன் மனம்

எந்நாளும் ஓர் நிறைமதி...


அவனிடம் கேட்டு வைத்தேன்

அன்பே! உனை என் வரமாக

தந்தும் அரவணைத்த பூரணை

மதியாள் மாதங்கி தயவால் 🌿




காவியம் என காதல் பணி செய்து

ஆவியை ஒன்றாக்கி உணர்த்திடும்

அற்புத யோகத்தின் வழியே நீயென

நானென்ற பேதம் விலக்கிடுவோம்...


வினய மானுடத்தின் வீம்புகளை

நாம் துறக்கின்ற வழியில் அன்பே

வேதனை வெந்துயர் என்பதெல்லாம்

ஈசனின் வழியில் இல்லையடி...


களைப்பற்ற மனம் தந்து உத்திர

வழியில் உயர்வான காட்சியெல்லாம்

காட்டிடும் தாயெனும் தலைமை

இனியும் நமக்கு தயவு செய்யும்....



கவிதை எழுதிட பணித்திட்ட காலை

என்னை கடிதமாய்‌ மாற்றி வைக்கும் 

உதயனின் இதயம் இன் தமிழால்

உனை இனிதென நாளும் பற்றும்...




#மாதங்கியின்_மைந்தன்

No comments:

Post a Comment