மௌனமாய் பல காலம் அமர்ந்திருந்து
மதங்கரின் செல்வி 💞
உன்னை மனத்தினுள்
நினைத்திருந்து....
புருவ மத்திக்கு 🔥நடுவே பூரணை
உன் பொன்முகம் அதை
காட்சிப் பொருளாய் எண்ணி....
மௌனப் புன்னகை ☺️நிகழ்ந்திடும்
காதல் வித்தையை எண்ணி எண்ணி
❤️❤️❤️❤️❤️❤️
தனிமையில் என் ஹாஸ்யங்கள்....
ஹாஸ்ய ஹாரிணி
நீ இல்லாத பொழுதில்
உன்னை நாளும் எண்ணியே
தொடரும் என் தனிமைத் தவம்💯....
அருகில் நீ இருந்தும் தவம் தொடரும்
அந்த அற்புதக் காரணம்
மன்னுயிர்க்கும்
மகாசக்தி உன்னை உணர்ந்திடவே....
ஆலகாலம் என்னைத் தீண்டி
கண்டம் தாண்டும் முன்னே
அதனில் கை வைத்து
எம்மை நீலகண்டன் ஆக்கினாய்
இரவு வந்து என் கண்களை தழுவும்
ஆயினும் என் நினைவு
உன்னை தொடரும்.....
இனியும் தொடர்ந்திருப்பேன்....
#மாதங்கியின்_மைந்தன்
No comments:
Post a Comment