இருள் கண்டவுடன் விலகாது
என் கரத்தை தான் கோர்த்து நடக்கிறாய்
கவ்விய இருள் ஏற்படுத்தியதோ
உன் நெஞ்சில் கலக்கம்...
இருள் கண்டவுடன் விலகாது
என் கரத்தை தான் கோர்த்து நடக்கிறாய்
கவ்விய இருள் ஏற்படுத்தியதோ
உன் நெஞ்சில் கலக்கம்...
நானே நாளும் தள்ளி நின்று
வியந்து பார்க்கின்ற
உன் உயர்வும் ஓர் ஆச்சர்யம் ❤️
அங்கே அங்கே உன் உருவம்
மறைந்து வியப்பாய்
நிலைக்கின்ற தெய்வீகம்💞
பேரன்பே!💞🌿🌿🌿
ஒருமை எனும் ஆகாயம்
என்றும் உனக்காக காத்திருக்கும்....
உள்முகத் துணிவும் உந்தன்
பணியென தொடர்ந்து விட்டால்
ஆச்சர்யங்கள் கூட்டி வைக்கும்...
எழுகின்ற விருத்தங்களை
இயல்பாய் விரட்டி விட
வருகின்ற வெற்றிடம் தான்....
வெற்றித் தலைமை தன் சித்தமென
நாம் அதுவாகிட ஒன்றாகிட
அற்புத மனமாகிய ஆசனம் 👍
திருமலை சுமப்பவன் நம்மவர்
அன்பிலே அதற்காய் அழைப்பும்
அழகாய் வந்ததே...
விண் அளிக்கும் பரவசங்கள்
எல்லாம் அந்நாள் தொட்டு
அவனருளால் துலங்கியதே ⚕️
மாய மனம் வரித்த கால
வலையினுள்ளே மாயையால்
வீழ்ந்திடாது நீயும்....🔥
நித்தியத் திங்கள் போல
நினைவினில் பூரணைப் பொலிவுடன்
நிலைத்திட எத்தனிப்பாய்...🏹
துயர் எனும் மேகம் விலகிட
பேசா மந்திரத்தின் துணை தேட
உதவியென உதயனின் செயல்.....💝
வரவினில் மகிழ்ந்திடாது
இருளினில் உயிர்களின் மனம்
அறிவாய் அன்பே!!✍️
வற்றிய ஓடையின் சேற்றில்
சிக்கிய கயல் போல வாழ்வின்
மாயையால் அவர் நிலை!!🙆
பொய் தேகம் காணும் மாற்றங்கள்
மாய மனதின் குற்றங்கள்
எல்லாம் ஊழின் உருட்டாய்.....⛷️
பரியின் பயணம் ஆகிய வாழ்வில்
சிந்தனை யாவுமே சிவமானால்
தித்திக்கும் தேனென வாழ்வும்...
இயல்பாய் ஆனந்தம் கூடிட
எண்ணிடக் காலங்கள் எல்லாம்
அதீதமில்லை அன்பே⚕️
அகமதை மறைத்திருக்கும்
மோக மேகமதை யோகம் கொண்டு
விலக்கி விட எத்தனிப்பாய்...
முனைப்பின் முடிவாய் அன்பே!
பேரொளி முன்னே தோன்றி
நாம் காணா பெருமிதம் தந்து...
ஒன்றாதல் ஒருங்கிணதல் என்ற
உயிர்க்காதலின் உன்னதம்
காண்போம் அந்நாள்🌿 அவனால் ❤️
ஆகட்டுமே அதுவும் 🌿🌿
இருப்பினில் மையம் கொள்ள
இயல்பாய் அன்பு செய்யும்
என்னை ஆட்கொள்ளும்
உன் காதல் ஒரு வெகுமதி...
இருத்தலில் கடினம் பல
சகித்துச் செல்லும் பண்பில்
என் சகியே உன் மனம்
எந்நாளும் ஓர் நிறைமதி...
அவனிடம் கேட்டு வைத்தேன்
அன்பே! உனை என் வரமாக
தந்தும் அரவணைத்த பூரணை
மதியாள் மாதங்கி தயவால் 🌿
காவியம் என காதல் பணி செய்து
ஆவியை ஒன்றாக்கி உணர்த்திடும்
அற்புத யோகத்தின் வழியே நீயென
நானென்ற பேதம் விலக்கிடுவோம்...
வினய மானுடத்தின் வீம்புகளை
நாம் துறக்கின்ற வழியில் அன்பே
வேதனை வெந்துயர் என்பதெல்லாம்
ஈசனின் வழியில் இல்லையடி...
களைப்பற்ற மனம் தந்து உத்திர
வழியில் உயர்வான காட்சியெல்லாம்
காட்டிடும் தாயெனும் தலைமை
இனியும் நமக்கு தயவு செய்யும்....
கவிதை எழுதிட பணித்திட்ட காலை
என்னை கடிதமாய் மாற்றி வைக்கும்
உதயனின் இதயம் இன் தமிழால்
உனை இனிதென நாளும் பற்றும்...
#மாதங்கியின்_மைந்தன்
உள்ளத்தை உன்னிடம் தர வைத்து
உருக்கத்தை அவன்
வாங்கிக் கொண்டான் 🪷🪷
உயிர் என்று உடல் ஒன்று கொண்டு
உலவுகின்ற காலமெல்லாம்
உன் நினைவும் என்னில் 💞💞💞
காலங்களில் தானெழுந்து
புதியதாய் இன்னிசை கவி பாடும்
பழகிய வார்த்தைகள் தான்...✍️✍️
புதியதைப் போல் தோற்றம் கொண்டு
என் மௌனத்தை மொழிபெயர்க்கும்..🌙🌙
பதுமை அவள் இருப்பின் நேரத்தில்
பாவையோடு பேசிட மொழி மறந்து
வேலையில் மூழ்கும் காலம்...👥👥
புகையில்லா தொடர் வண்டியோடு
அழைக்காமல் மனம் தானே செல்லும்
நான் அறியா வலை தான் அன்பே.👩❤️👨.
எனை வீழ்த்தி உனதாக்கிய நீதான்
பரம்பொருள் எனக்குச் செய்த
அன்பெனும் காதல் சிறை 💘💘
நெஞ்சம் உறைந்த காலம் பின்னும்
நீடுழி வாழும் உன் இருப்பில்
நான் என்றும் இருப்பேன்
❤️🧡💛💚💙💜🤎🖤
#மாதங்கியின்_மைந்தன்
#உதயகீதம்
முட்களை சுமந்து கொண்டு இருக்கின்றாய்...
முளைத்து விட்ட மலர் வனத்தின்
வாசம் எட்டவில்லை உனக்கு...
அன்பியலே உன் அருகாமை
ஒன்றுதான் தொலையாத
துயரங்களைதொலைக்கும்...
அக இருள் மன மாயை
தனை விலக்கத்தான் என்
காதலே என்னை நீங்காதிரு...
என்னை நான் என்ற
தன்முனைப்பு தன்னால்
கரைந்து போகும் அத்தருணம் அது....
அறியும் மனதும் அறிவும்
தன் முகவரியை இழந்து விட
தொலைந்த ஒன்று எங்கே செல்லும்...