Friday, October 13, 2023

வாழ்த்துக்கள் அன்பே

 



முன்னதாய் சென்று நாளும் 

ஆற்றும் முனைப்பான 

அன்பின் வழி என்றும் புதியது...


அன்பே சிவம் 




ஆதித்தன் உதயன் இதயத்தில்

அன்பே உன் பெயரும்

என்றும் அழியா முழு மதியாய்❤️


மதியின் விருத்திகள் வலுத்து

வானலையாய் வலுக்கும் காதல் 

வேதம் போல் என்றும் புதியது 🌿


புதியதாக மதியை  செய்யும் 

பெரியதோர் வித்தக கலையும்

விதியோர் வழி வந்ததால்❤️


நான் நாளும் பற்றி நிற்கும்

நான் அகற்றும் கலை வழியே

நாளும் புதியதாக அன்பே


புதியதாக நித்தமும் பிறப்பாய்

நீயும் பேரன்பும் என்றும் என்னில்

உன் முகவரியும் புதியதாகும். 🪷


என்றோ எனக்காக பிறந்து

என்றும் எனக்குள் மாண்பாய்

நித்தமும் பிறப்பவளே ❤️




வல்லமைத் தலைவன் பதஞ்ஜலியும்

வானவர் தெய்வம் மாதங்கியும்

உன்னை உச்சி முகர்ந்து

உயர்வான வரங்கள் உனக்களிக்க

இனிமை என்றும் உனதாகிட வேண்டும் 

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்




 #மாதங்கியின்_மைந்தன்

  (12.10.2023 )

No comments:

Post a Comment