Sunday, October 1, 2023

காதல் எனும் காத்திருப்பு

 

அன்பியலே உன் அருகாமை

ஒன்றுதான் தொலையாத

துயரங்களைதொலைக்கும்...


அக இருள் மன மாயை

தனை விலக்கத்தான் என்

காதலே என்னை நீங்காதிரு...



நீ நானென்பதெல்லாம்

வேரகன்று போய் நாமெனும்

பிழையில்லா சொல்லில்

பொருந்திக் கிடப்போம்........


தரணி போற்றும் தமிழோடு

நாளும் வளர்ந்திருக்கும் நம்

காதல் எனும் காத்திருப்பு......




  #மாதங்கியின்_மைந்தன்

No comments:

Post a Comment