காந்தி ஜெயந்தி
வாய்மையின் வல்லமைக்கு
ஆகச் சிறந்த அடையாளமே...
அகிம்சையின் உச்சத்தை தொட்ட
உயர்வே உன்னதமே....
ஆசையின் நிழல்
அவரை தொடாத ஒரு அதிசயம்...
ஒப்பற்ற தேசத்தின் மாண்பை காத்திட
ஒரு நூறு காந்திகள் என்றும் வேண்டும்...
சகிப்புத்தன்மையற்ற
சரித்திர பிழைகள் மறைந்து போக...
சங்கடங்கள் வலைபோல்
எம்மை சூழ்ந்து நிற்க...
சதிராடும் சூழ்ச்சி துயரிலிருந்து மீட்பதற்கு..
இத்தேசம் மீட்டிட எண்ணம் இல்லாமல்
இன்னும் மீளா உறக்கம் எதற்கு 🙏🏽🙏🏽🙏🏽
மீண்டெழுவீர் தேசத் தந்தையே 🙏🏽🙏🏽
மீண்டும் வேண்டும்
உங்கள் இருப்பு🪷🪷
விரைந்து வாருங்கள்
*மகாத்மாவே எங்கள் காந்தி*
#மாதங்கியின்_மைந்தன்
No comments:
Post a Comment