Sunday, October 1, 2023

அகம் மலரட்டும்

 என்னை நான் என்ற

தன்முனைப்பு தன்னால்

கரைந்து போகும் அத்தருணம் அது....


அறியும் மனதும் அறிவும்

தன் முகவரியை இழந்து விட

தொலைந்த ஒன்று எங்கே செல்லும்...



இலக்குகள் ஏக்கங்கள் குமுறல்கள்

கெஞ்சல்கள் என்ற ஏதொன்றும்

இல்லாமல் போய்விட....


விழித்தவுடன் மலங்க மலங்க நிலை

கொண்ட மனத்தின் தன்மையே

இதுவரை அறியாத புதுப் பயணம்....


அமைதி ஒன்றே அரிதான பேரின்பம்

அறிந்திட  மீளும் நிலையில்

இல்லாது போன பெருங்குழப்பம்........


அறிதல் என்ற முடிவில்லா 

காதல் பயணம் வெகுவாக தொடரட்டும்....

அகம் மலரட்டும்.....


#மாதங்கியின்_மைந்தன்

No comments:

Post a Comment