Friday, February 13, 2026

நித்தியக் காதலின் வாழ்த்துக்கள்

அன்பே ! உம் நித்தியத்தின் 
பின்புலத்தின் மீதான
உறுதியில் தொடரும்
என் வாழ்வியல் பயணம்...
 
காதலைக் கடமையாக்கி
பின்வரும் இக்காலம்
கடமையை காதலாக்கி
நீயும் தொடர்கின்ற அற்புதம்..

இதயக்கனியானவள்
என்னில் இனியவள்
அற்புதக் குறிஞ்சி உன்
அருமையை அரிதாகவே அறிவேன்..

அது என்ன இத்தினம் மட்டும்???
இக்கணம் எக்கணமும்
வரும் கணம் பலவும்
காலம் யாதுமாகிய

இராக தேவியும்
கால தெய்வமும் என் உயிர்
போற்றும் வீணை மாதங்கி
தந்த ஆருயிர் கீதமாம்

என் இனியவளிற்கு நித்திய காதலின் வாழ்த்துக்கள்

#மாதங்கியின்_மைந்தன் #காதலர்தினம் #ValentinesDayChallenge #பிப்ரவரி14

No comments:

Post a Comment