Saturday, February 14, 2026

நேசம் புதிது

காலம் தந்த காயம் ஆற
கடவுள் தந்த பரிசுதான் 
அவள் காதல் எனும் களிம்பு 
காத்திருந்தேன் ஆண்டுகள் பல
அவளை நான் கரம் கோர்க்கவே 
வெற்றி என்ற இன்பக் கோடு
விதி என்ற பேதையிடம் 
சிக்கித் தவிக்க அவள்  புன்னகை 
வந்து விடுவித்து ஆக்கியது 
தடை ஒன்றை  தவிடாக 

கறுப்புச் சிலையென வீற்றிருந்தும் 
அதன் கண் உள்ளே கண்டேன் 
நான் காதலை . அழியாத காதல் 
என்ற அமரத்துவம் மிகுந்த பக்தி 

தினம் ஒரு களம் என்று 
களம் காணப் புறப்பட்டார்கள் 
யுவ, யுவதிகள் அழியாக் காதலுக்கும்                                     
ஓர் தினம் காணவே 

காதலுக்கும் ,கவர்ச்சிக்கும் பேதம் 
அறியா மேதைகள் கவர்ச்சியே
காதல் என்று புது வேதம் படிக்கிறார்கள்.

ஒரு நாள் உடைந்து போகும் 
இந்த கவர்ச்சி என்ற காதல் மாயை 
அன்றும் கொண்டாடுவோர்களோ 
காதல் ஒன்று என்று இல்லாத தினம் 

இவள் இல்லையெனில் அவள் 
அவன் இல்லையெனில் இவன் 
என்று நித்தம் ஓர் அதிகாரம் படைக்கும் 
கானப் பறவைகளே 

தேடுங்கள் காதலை 
இலக்கியத்திலும், இதயத்திலும் 
தேடவேண்டாம் கடற்கரை சாலைகளிலும் 
காபி ஷாப்களிலும்  

கவர்ச்சி என்ற மாயையில் 
கை கோர்த்துப் பாடி  இணைந்தவர்கள் 
நீதிமன்றங்களை நாடுகிறார்கள் 
விடுதலை எனும் பத்திரம் நாடி 

வானிற்கும்  வானவில்லும் 
புரிந்து கொள் ஓர் வேற்றுமை 
வான் போல காதல் நிலைத்தது 
கவர்ச்சி வானவில் போல மறையும் 
ஒர் நாள்

#மாதங்கியான் #காதல் #மாதங்கியின்_மைந்தன்

No comments:

Post a Comment