Friday, February 13, 2026

இதய இசையின் ஈருயிர் பயணம்

இணைபிரியா #இதய இசைவில்
தொடர்ந்திடும் ஈருயிர் #பயணம் 
#காதல் என்றும் மாறாது நிஜமாய்
வருகின்ற நித்தியம்.......
 
ஓர் நாளும் மலர்கள் வீச 
மறந்திடாது மணம். கடமையும்
காதலும்  சுமக்கும் பாவையர்க்கு
நித்தமும் காதலின் தினம்.....

கணந்தோறும் நிகழ்ந்திடும் நிகழ்வினை 
தினம் என்று சொல்லி மகிழ்ந்தால்
நம் இயற்கையின் இலக்கணப்பிழை              
என்று பிழையான புரிதலாகும்...

#உலகம் பிறந்ததும் உயிர்கள் பிறந்ததும்     
பரமும் தன்னால் இயங்குவதும்
 யாருக்கும் முன் தான்தோன்றி 
தரணி ஆளும் இயற்கையின் காதலாலே

வாடா மலராய் மாறிப்போன 
#வஞ்சியர் உள்ளம்தனை பேசாமல் 
பெருமிதமாய் எண்ணி எண்ணி
பூரிக்கும் மாந்தர்க்கோ அனுதினம்
 #காதலர் #தினம்........

#மாதங்கியின்_மைந்தன்

No comments:

Post a Comment